கிறிஸ் கெய்லின் டி20 சாதனையை முறியடித்த பாகிஸ்தான் கேப்டன்!

டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லின் சாதனையை யாராவது முறியடிக்க முடியுமா?
கிறிஸ் கெய்லின் டி20 சாதனையை முறியடித்த பாகிஸ்தான் கேப்டன்!


டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லின் சாதனையை யாராவது முறியடிக்க முடியுமா?

அதுவும் வேகமாக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில்!

டி20 கிரிக்கெட்டில் 9000 ரன்களை விரைவாக எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார் கிறிஸ் கெயில். 249 இன்னிங்ஸில் அவர் 9000 ரன்களைக் கடந்திருந்தார்.

இந்நிலையில் அதை விடவும் குறைவான இன்னிங்ஸில் 9000 ரன்களைக் கடந்து கெய்லின் சாதனையை முறியடித்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம். 

பிஎஸ்எல் போட்டியில் பெஷாவர் அணியின் கேப்டனான பாபர் ஆஸம், 39 பந்துகளில் 64 எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார். 

இதன்மூலம் 245 இன்னிங்ஸில் 9000 டி20 ரன்களைக் கடந்த பாபர் ஆஸம், பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் விராட் கோலி, 271 இன்னிங்ஸில் 9000 ரன்களை எடுத்து 3-ம் இடத்தில் உள்ளார். 

குறைந்த இன்னிங்ஸில் 9000 டி20 ரன்கள்

பாபர் ஆஸம் - 245 இன்னிங்ஸ்
கிறிஸ் கெயில் - 249 இன்னிங்ஸ்
கோலி - 271 இன்னிங்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com