ஷெபாலி வர்மாவுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட்டர் யார் தெரியுமா?
By DIN | Published On : 02nd May 2023 06:23 PM | Last Updated : 02nd May 2023 06:23 PM | அ+அ அ- |

ஷெபாலி வர்மா பதினைந்து வயது நிரம்பி ஒன்பதரை மாதங்கள் நிறைவுற்ற நிலையில் மேற்கிந்திய தீவுகளின் பெண்கள் கிரிக்கெட் அணியை எதிர்த்து முதலாவது டி20 போட்டியில் ஆடி நாற்பத்தொன்பது பந்து வீச்சில் எழுபத்திமூன்று ஓட்டங்களை ஈட்டி சச்சினின் சாதனையை முறியடித்தார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறு வயதில் "அரை சதம்' அடித்த இந்தியர் - கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் ஷெபாலி வர்மாவை வந்தடைந்துள்ளது. இவரது இந்த சாதனை இந்திய கிரிக்கெட் ஆர்வலர்களின் கவனங்களை ஈர்த்திருக்கிறது.
இதையும் படிக்க: முதல்முறையாக ஆசிய கோப்பைக்கு தேர்வான நேபாளம்!
ஷெஃபாலி வர்மா இந்தியாவின் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கி வருகிறார். விரேந்தர் சேவாக் போல பயமில்லாமல் ஆடும் ஆட்டத்தினால் பெயர் போனவர். அவர் சச்சின் ரசிகர் என்று எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்துவார்.
இதையும் படிக்க: டெஸ்டில் முதலிடம் பிடித்த இந்திய அணி!
தற்போது இன்ஸ்டாகிராம் ஷெபாலியிடம் தங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட்டர் யாரென கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளித்த ஷெபாலி, “சச்சின் சாருக்கு அடுத்து லியாம் லிவிங்ஸ்டனின் பேட்டிங் பிடித்துள்ளது. தற்போது எனக்கு 2 பிடித்தமான வீரர்கள் இருக்கிறார்கள்” என ஜாலியாக கூறியுள்ளார்.
லியாம் லிவிங்ஸ்டன் இங்கிலாந்தை சார்ந்த அதிரடி ஆட்டக்காரர். இவர் தற்போது ஐபிஎல்-இல் பஞ்சாப் அணியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...