முதலிடத்திற்கும் கடைசி இடத்திற்கும் போட்டி: தில்லி பேட்டிங் தேர்வு- அணியில் 2 மாற்றங்கள்
By DIN | Published On : 02nd May 2023 07:42 PM | Last Updated : 02nd May 2023 07:43 PM | அ+அ அ- |

புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் தில்லி அணியும் இன்று நரேந்திர மோடி ஆடுகளத்தில் பலப்பரீட்சை செய்கிறது.
தில்லி அணியில் 2 மாற்றங்கள்: மிட்செல் மார்ஷ் இடம் பெறவில்லை. புதியதாக ரைலி ரோஸ்ஸோவ், அமன் ஹகிம் கான் அணியில் சேர்ப்பு.
குஜராத் அணியில் மாற்றமில்லை என ஹார்திக் பாண்டியா கூறியுள்ளார்.
முதல் ஓவரிலேயே தில்லி அணியை சேர்ந்த பிலிப் சால்ட் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...