ஆப்கானிஸ்தானில் 1000க்கும் அதிகமான ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்: ரஷித் கான் நெகிழ்ச்சி 

குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த ரஷித் கான் எங்களது நாட்டில் 1000 ஸ்பின்னர்கள் இருப்பதாக நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். 
ஆப்கானிஸ்தானில் 1000க்கும் அதிகமான ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்: ரஷித் கான் நெகிழ்ச்சி 

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். 

ஜெய்ஷ்வால் விக்கெட்டிற்குப் பிறகு அணியே நிலை குழைந்தது. சாம்சன் மட்டும் அதிரடியாக விளையாடி 30 ரன்கள் அடித்தார். பின்னர் வந்தட் பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரஷித் கான் சுழலில் ராஜஸ்தான் அணியினர் ரன்கள் அடிக்க திணறினர். நூர் அஹமதும் சிறபாக பந்து வீசி 2 விக்கெட்டுகள் எடுத்தார். 

குஜராத் 13.5 ஓவர்களில் 119 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரஷித் கான்  3 விக்கெட்டுகள் எடுத்த காரணத்திற்காக ஆட்ட நாயகன் விருது வென்றார். இது குறித்து அவர் பேசியதாவது: 

புதியதாக ஒன்றுமில்லை. எனது லெக் ஸ்பின் பந்தினையும் ஆஃப் ஸ்பின் பந்தினைனையும் பேட்டர்கள் புரிந்து கொள்ளாதபடி வீச முயல்கிறேன். இதற்காக வலைப் பயீர்சியில் கடினமாக பயிற்சி எடுக்கிறேன். லைன் அண்ட் லெந்த் சரியாக வீச பயிற்சி எடுக்கிறேன். தவறாக வீசும்போதெல்லாம் பேட்டர்கள் அடித்திருக்கிறார்கள். நூர் அஹமதுவும் சிறப்பாக வீசினார். உண்மையிலேயே எங்களது நாட்டில் (ஆப்கானிஸ்தானில்) ஆயிரத்திற்கும் அதிகமான ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். நான் முதன்முறையாக ஐபிஎல் விளையாட வரும்போது 250 ஸ்பின்னர்கள் இருந்தார்கள். என்னைப் போலவே அவர்களும் விளையாட ஆசைப்படுகிறார்கள். வாய்ப்பு கிடைக்காமல் இன்னும் பலர் இருக்கிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com