டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!
By DIN | Published On : 06th May 2023 08:08 AM | Last Updated : 06th May 2023 08:08 AM | அ+அ அ- |

தோஹா 'டைமண்ட் லீக்' தடகளப் போட்டியில் முதல்முறையாக தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.
இந்நிலையில் கத்தாரில் 2023 ஆம் ஆண்டிற்கான 'டைமண்ட் லீக்' தடகளப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் ஈட்டி எறிதலில் 88.67 மீ தூரம் ஈட்டி எறிந்து முதல்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதையடுத்து நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G