விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ஐபிஎல்: முதல் வீரராக 7 ஆயிரம் ரன்களைக் கடந்து விராட் கோலி சாதனை!

பெங்களூரு அணியின் விராட் கோலி ஐபிஎல் தொடரில் முதல் வீரராக 7,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

News image
Updated On :7 மே 2023, 11:09 am IST

பெங்களூரு அணியின் விராட் கோலி ஐபிஎல் தொடரில் முதல் வீரராக 7,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தியத்தில் பெங்களூருவை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. விராட் கோலி 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நேற்றையப் போட்டியில் 19 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த விராட் கோலி புதிய சாதனை ஓன்றை படைத்தார். ஐபிஎல் தொடரில் 7 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அதேபோல தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக மட்டும் அவர் 1000 ரன்களுக்கும் மேலாக குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் தற்போது 7,043 ரன்களுடன் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஷிகர் தவான் 6,536 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், 6,211 ரன்களுடன் டேவிட் வார்னர் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். 

இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி 419 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். நேற்று அவர் அடித்த அரைசதம் இந்த சீசனில் அவர் அடித்த 6-வது அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.