ஹல்லாபோல் கொஞ்சம் மெல்லமாபோல்... : கிண்டல்களுக்கு அஸ்வின் பதிலடி 

தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்.
ஹல்லாபோல் கொஞ்சம் மெல்லமாபோல்... : கிண்டல்களுக்கு அஸ்வின் பதிலடி 

தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். தமிழர்கள் சிஎஸ்கேவும் ஆதரவு தெரிவிப்பது போலவே தமிழர்களுக்கும் ஆதரவு தெரிவிப்பார்கள். அதன்படி ரவிசந்திரன் அஸ்வின், ஷாருக்கான், விஜய் ஷங்கர் போன்றவர்கள் எந்த அணியில் விளையாடினாலும் நன்றாக விளையாட வேண்டுமென நினைப்பார்கள். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கேரளத்தை சேர்ந்தவர். சூப்பர் ஸ்டார் ரஞினி ரசிகர். அவரும் தமிழ் பேசக்கூடியவர். சமீப காலங்களில் அஸ்வின் விடியோ பகிர்ந்து அதில் ராஜஸ்தான் அணிக்கும் தமிழர்கள் ஆதரவு தரக்கோறி பேசுவார். முடிவில் ஹல்லாபோல் கொஞ்சம் நல்லாபோல் எனப் பேசுவார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. ஹல்லாபோல் என்பதற்கு உங்களின் குரலை உயர்த்துங்கள் என்பது பொருள். 

கடந்த 3 போட்டிகளில் ராஜஸ்தான் தொடர் தோல்வியை சந்துத்து வருகிறது. ஆனால் அஸ்வின் சிறப்பாகவே பந்து வீசி வருகிறார். 10 புள்ளிகளில் அப்படியே இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அஸ்வினை ஹல்லா போல் என கிண்டல் செய்து வருகின்றனர். 

இதற்கு பதிலடியாக நகைச்சுவையாக அஸ்வின், “10 புள்ளிகளில் அங்கேயே தங்கி விட்டோம். தூங்கி விட்டோம். ரசிகர்கள் நம்மை கிண்டல் செய்கிறார்கள். முன்பை விட தற்போது நம்மை கவனிக்கிறார்கள். நம் மீது அன்பு இருப்பதால்தான் கிண்டல் செய்கிறார்கள். ஹல்லாபோல் கொஞ்சம் மொல்லமாபோல்” என பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com