மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சஞ்சு சாம்சன் ஒரு குட்டி எம்.எஸ்.தோனி: முன்னாள் இங்கிலாந்து வீரர்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் அமைதியாக செயல்படும் விதம் மற்றும் ஆட்டத்தினை கணிக்கும் திறன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியைப் போல் உள்ளது.

News image
Updated On :11 மே 2023, 1:39 pm

DIN

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் அமைதியாக செயல்படும் விதம் மற்றும் ஆட்டத்தினை கணிக்கும் திறன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியைப் போல் உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரீம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

சஞ்சு சாம்சன் மகேந்திர சிங் தோனியின் இளம் வெர்சன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 308 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 154.77 ஆகும். அவரது தலைமையிலான ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் முனைப்போடு விளையாடி வருகிறது. 

இந்த நிலையில்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் அமைதியாக செயல்படும் விதம் மற்றும் ஆட்டத்தினை கணிக்கும் திறன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியைப் போல் உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரீம் ஸ்வான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக கிரீம் ஸ்வான் கூறியதாவது: எனக்கு சஞ்சு சாம்சனிடம் பிடித்தது என்னவென்றால் அவர் நாளுக்கு நாள் தன்னுடைய தலைமைப் பண்பை வளர்த்து வருகிறார். தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடும் மூத்த வீரராகவும் அவர் உருவெடுத்து வருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எப்படி சிறப்பாக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். 6-7 போட்டிகளில் பெரிதாக ரன்கள் எடுக்காமல் பின்னர் அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படும். அவர் கிட்டத்தட்ட ராஜஸ்தான் அணியின் எல்லாமும் என நான் நினைக்கிறேன். அவர் மிகவும் அமைதியாக இருக்கிறார். அவர் ஒரு குட்டி எம்.எஸ்.தோனி. அவர் அவருடைய கேப்டன்சியினால் பொறுமையை இழக்கவில்லை. அவர் நிதானமாக செயல்படுகிறார். அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்குத் தெளிவாக தெரிகிறது. அவர் ஆட்டங்களை சிறப்பாக கணிக்கிறார் என்றார்.

இந்த ஐபிஎல் சீசனை ராஜஸ்தான் அணி சிறப்பாக தொடங்கியது. ஆனால், பின்னர் 3 போட்டிகளில் ஏற்பட்ட தோல்வியினால் புள்ளிப்பட்டியலில் தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.