தில்லி அணியின் தோல்விகளுக்கு இதுதான் காரணம்: ஷேன் வாட்சன்

தில்லி கேப்பிடல்ஸ் அணி வீரர்கள் தொடர்ச்சியாக சீரான பேட்டிங்கை வெளிப்படுத்தாதே இந்த சீசனில் தில்லி சந்தித்து வரும் தோல்விகளுக்கு காரணம் என அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
தில்லி அணியின் தோல்விகளுக்கு இதுதான் காரணம்: ஷேன் வாட்சன்

தில்லி கேப்பிடல்ஸ் அணி வீரர்கள் தொடர்ச்சியாக சீரான பேட்டிங்கை வெளிப்படுத்தாதே இந்த சீசனில் தில்லி சந்தித்து வரும் தோல்விகளுக்கு காரணம் என அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

இந்த ஐபிஎல் சீசன் தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மோசமான சீசனாக அமைந்துள்ளது எனவே கூற வேண்டும். இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேப்பிடல்ஸ் அணி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. நேற்றையப் போட்டியிலும் சிஎஸ்கேவிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

நேற்றையப் போட்டியில் தில்லி அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். அவர்களது அபார பந்துவீச்சினால் சென்னை அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தில்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டி குறித்து தில்லி அணியின் உதவி பயிற்சியாளர் ஷேன் வாட்சன் கூறியதாவது: நாங்கள் எங்களது பேட்டிங் திறமைகளை நீண்ட நேரம் களத்தில் வெளிப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் எங்களால் சிறப்பான பேட்டிங் திறமைகளை வெளிப்படுத்த முடியும். 167 ரன்களுக்குள் சென்னை அணியை கட்டுப்படுத்தியது சிறப்பான விஷயமாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் 168 ரன்களை விரட்டிப் பிடிக்க சிறப்பான தொடக்கம் என்பது மிகவும் அவசியம். துரதிருஷ்டவசமாக எங்களுக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. பவர்பிளேவில் விக்கெட்டுகளை இழந்த பின்பு பார்ட்னர்ஷிப்பை கட்டமைப்பது என்பது கடினமாக விஷயம். தில்லி கேப்டன் டேவிட் வார்னர் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்ததும் அணியின் தோல்விக்கு ஒரு காரணமாகும். பெங்களூரு அணிக்கு எதிராக எல்லாமே சிறப்பாக அமைந்தது. டேவிட் வார்னர் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தார். அதன் பின் சிறிது நேரத்தில் பில் சால்ட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆட்டமிழந்தனர். அதனால், சிஎஸ்கேவுக்கு எதிரான எங்களது ஆட்டம் சிறப்பானதாக அமையவில்லை. நாங்கள் ஒரு அணியாக எங்களது நிறை குறைகளை சரிசெய்து வருகிறோம் என்றார்.

தில்லி கேப்பிடல்ஸ் வருகிற மே 13 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தனது அடுத்த போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com