
மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜி தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நவீனயுக காதல் கதைகளை மையமாக வைத்து முன்னெடுக்கப்பட்ட ஆந்தாலஜி வகை இணையத் தொடர் ‘மாடர்ன் லவ்’. ஏற்கனவே, ’மாடர்ன் லவ் மும்பை’, ’மாடர்ன் லவ் ஹைதராபாத்’ ஆகிய சீரியஸ் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் வருகிற மே 18 ஆம் தேதி மாடர்ன் லவ் சென்னை தொடரும் வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: மாடர்ன் லவ் சென்னை : வெளியான இயக்குநர்கள் பட்டியல்!
இந்நிலையில், இத்தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் இளையராஜாவின் பின்னணிப் பாடலில் 6 இயக்குநர்கள் இயக்கிய படங்களின் காட்சிகள் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.