
மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜி படங்களின் பெயரும் இயக்குநர்கள் பட்டியலும் வெளியாகியுள்ளது.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நவீனயுக காதல் கதைகளை மையமாக வைத்து முன்னெடுக்கப்பட்ட ஆந்தாலஜி வகை இணையத் தொடர் ‘மாடர்ன் லவ்’. ஏற்கனவே, ’மாடர்ன் லவ் மும்பை’, ’மாடர்ன் லவ் ஹைதராபாத்’ ஆகிய சீரியஸ் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் வருகிற மே 18 ஆம் தேதி மாடர்ன் லவ் சென்னை தொடரும் வெளியாகவுள்ளது.
இதில் 6 இயக்குநர்களின் காதல் படங்கள் இடம்பெற்றுள்ளன.
- லாலாகுண்டா பொம்மைகள்: இயக்குநர் - ராஜூ முருகன். இசை - ஷான் ரோல்டன், நடிகர்கள் - ஸ்ரீ கௌரி ப்ரியா, வாசுதேவன் முரளி, மற்றும் வசுந்தரா உள்பட பலர்.
- இமைகள்: இயக்குநர் - பாலாஜி சக்திவேல், இசை - யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் - அசோக் செல்வன் மற்றும் டி.ஜே பானு உள்பட பலர்.
- காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற இமோஜி: இயக்குநர் - கிருஷ்ண ராம் குமார், இசை - ஜி.வி.பிரகாஷ் குமார், நடிகர்கள்-ரித்து வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ்
- மார்கழி: இயக்குநர் - அஜய் சுந்தர், இசை - இளையராஜா, நடிகர்கள்-சஞ்சுளா சாரதி, சூ கோய் ஷெங், மற்றும் ஸ்ரீகிருஷ்ணா தயாள்
- பறவை கூட்டில் வாழும் மான்கள்: இயக்குநர் - பாரதி ராஜா, இசை-இளையராஜா, நடிகர்கள் - கிஷோர், ரம்யா நம்பீசன், மற்றும் விஜயலக்ஷ்மி
- நினைவோ ஒரு பறவை: இயக்குநர் - தியாகராஜன் குமாரராஜா, இசை-இளையராஜா, நடிகர்கள்-வாமிகா மற்றும் பீபி
இத்தொடரில் 3 படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். நீண்ட நாள்களுக்குப் பின் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா படமும் வெளியாகவுள்ளதால் அவரின் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.