சூர்யகுமார் யாதவ் மிரட்டல் சதம்: குஜராத் அணிக்கு 219 ரன்கள் இலக்கு
By DIN | Published On : 12th May 2023 09:42 PM | Last Updated : 12th May 2023 09:43 PM | அ+அ அ- |

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தல் மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து அசத்தினார்.
ஐபிஎல் தொடரின் 57ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து அசத்தினார். அவர் 49 பந்துகளில் 6 சிக்சர்கள், 11 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் விளாசி 103 இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சூர்யகுமார் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். நடப்பு ஐபிஎஸ் தொடரில் ஹேரி புரூக், ஜெய்ஸ்வால், வெங்கடேஷ் ஐயரை தொடர்ந்து தற்போது சூர்யகுமார் யாதவும் சதம் அடித்து அசத்தியுள்ளார். இன்றையப் போட்டி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிக முக்கியமான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.