சிஎஸ்கே அணிக்காக விளையாடிய 50-வது போட்டியில் அசத்திய ருதுராஜ் கெய்க்வாட்!

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணிக்காக தனது 50-வது போட்டியில் இன்று (மே 20) விளையாடினார்.
சிஎஸ்கே அணிக்காக விளையாடிய 50-வது போட்டியில் அசத்திய ருதுராஜ் கெய்க்வாட்!

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணிக்காக தனது 50-வது போட்டியில் இன்று (மே 20) விளையாடினார்.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், தில்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் தில்லியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் மற்றும் கான்வே சிஎஸ்கேவுக்கு அதிரடியான தொடக்கத்தை தந்தது சிஎஸ்கேவுக்கு பெரிய அளவிலான ஸ்கோரினை கொடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ருதுராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் 50-வது போட்டி இதுவாகும். இன்றையப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 50 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். சிறப்பாக விளையாடிய அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

ஆட்டநாயகன் விருதினை வென்ற ருதுராஜ் கெய்க்வாட் பேசியதாவது: இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற அளவுக்கு முக்கியமான போட்டி. சிஎஸ்கே அணிக்காக நான் விளையாடும் 50-வது போட்டி இதுவாகும். சிஎஸ்கே அணிக்கு என்னுடைய பங்களிப்பை வழங்குவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது சவாலானதாக இருந்தது. சுழல் பந்துவீச்சாளர்களின் பந்துகளை மைதானத்தில் குறுகிய பகுதியில் பவுண்டரிகளுக்கு விரட்டினோம். நாங்கள் 10-12 ஓவர்கள் வரை விளையாடி ரன்களை குவித்தோம். எங்களுக்குப் பிறகு துபே, கேப்டன் தோனி, ஜடேஜா போன்றவர்கள் களமிறங்கி அணிக்கு பெரிய அளவிலான ஸ்கோரினை ஏற்படுத்துவார்கள் என எங்களுக்கு தோன்றியது. கான்வே சிறப்பாக விளையாடினார். சென்னை மைதானத்தில் விளையாடுவது கடினம். ஆனால், கான்வே சென்னை மைதானத்துக்கு ஏற்றவாறு தனது பேட்டிங்கை சிறப்பாக மாற்றிக் கொண்டார். அவருடன் பேட்டிங் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com