மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது: சச்சின்

மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக அந்த அணியி முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது: சச்சின்

மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக அந்த அணியி முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கேமரூன் க்ரீன், ஷுப்மன் கில் மும்பை அணிக்காக நன்றாக பேட்டிங் செய்தனர். விராத் கோலியும் அடுத்தடுத்து சதங்கள் விசாசி நன்றாக விளையாடி வருகிறார். மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. 

ஏற்கெனவே குஜராத், சென்னை, லக்னௌ ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை, பெங்களூரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பெங்களூரு - குஜராத் ஆட்டத்தில் பெங்களூரு தோற்றால் மட்டுமே மும்பைக்கான பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதியாகும் சூழல் இருந்தது. நேற்று நடந்த அந்த ஆட்டத்தில் குஜராத் வெல்ல, பெங்களூரு வெளியேற, மும்பை பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. 

பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வெல்ல ஷுப்மன் கில் முக்கியப் பங்காற்றினார். அதிரடியாக ஆடி சதமடித்த அவர் இறுதிவரை ஆட்டமிழகாமலும் இருந்தார்.  பெங்களூரு - குஜராத் மோதிய 70-ஆவது ஆட்டத்துடன் நடப்பு சீசனின் லீக் சுற்று நிறைவடைந்த நிலையில், குஜராத், சென்னை, லக்னௌ, மும்பை அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. அந்த சுற்று ஆட்டங்கள் நாளை (மே 23) தொடங்குகின்றன. 

அதில் சென்னையில் முதலில் நடைபெறும் ‘குவாலிஃபயா்-1’ ஆட்டத்தில் குஜராத் - சென்னை அணிகள் மோதுகின்றன. 24-ஆம் தேதி அதே இடத்தில் நடைபெறும் ‘எலிமினேட்டா்’ ஆட்டத்தில் லக்னௌ - மும்பை அணிகள் மோதவுள்ளன. பின்னா் ‘குவாலிஃபயா்-2’ ஆட்டம் மே 26-ஆம் தேதியும், இறுதி ஆட்டம் 28-ஆம் தேதியும் அகமதாபாதில் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com