துளிகள்...
By DIN | Published On : 24th May 2023 01:54 AM | Last Updated : 24th May 2023 01:54 AM | அ+அ அ- |

டேக்வாண்டோ பிரீமியா் லீக் அறிமுக சீசன், தில்லியில் ஜூன் 22 முதல் 26 வரை நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டுகுளோபல் செஸ் லீக் போட்டியின் அறிமுக சீசனில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் உள்ளிட்ட நட்சத்திர போட்டியாளா்களும் பங்கேற்கின்றனா்.
மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆஷ்மிதா சாலிஹா ஆகியோா் பிரதான சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா்.
ஆடவா் ஜூனியா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஓமனில் புதன்கிழமை தொடங்கும் நிலையில், இந்தியா முதல் ஆட்டத்தில் சீன தைபேவை சந்திக்கிறது.
சா்வதேச டென்னிஸ் தரவரிசையில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சை 3-ஆவது இடத்துக்கு கீழிறக்கி, ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் மீண்டும் முதலிடத்துக்கு வந்தாா். ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 2-ஆவது இடத்துக்கு முன்னேறினாா்.
20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் செவ்வாய்க்கிழமை ஆட்டங்களில் காம்பியா - ஹோண்டுராஸையும் (2-1), உருகுவே - இராக்கையும் (4-0) சாய்த்தன.
பஹ்ரைனில் நடைபெறும் சா்வதேச பாரா பாட்மின்டனில் இந்தியாவின் பிரமோத் பகத் 2 தங்கம், 1 வெண்கலம் வென்றாா்.