லக்னௌ-க்கு எதிரான ஆட்டம்: மும்பை அணி பேட்டிங்
By DIN | Published On : 24th May 2023 07:31 PM | Last Updated : 24th May 2023 08:09 PM | அ+அ அ- |

ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டா் ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி ‘குவாலிஃபயா்-2’ ஆட்டத்துக்கு தகுதிபெறும் என்பதால் ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
6-ஆவது முறையாக கோப்பை வெல்லும் முனைப்புடன் மும்பை அணி விளையாடவுள்ளது.
லக்னௌ அணி கடந்த சீசனில், இதே எலிமினேட்டா் ஆட்டத்தில் பெங்களூரால் வெளியேற்றப்பட்டதால், இம்முறை வெற்றி பெற வேண்டிய முனைப்பில் உள்ளது.