சாம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதிபெற்ற நியூகேசில்

இங்கிலாந்தின் பிரீமியா் லீக் கால்பந்து போட்டி இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், நியூகேசில் அணி முதல் 4 இடங்களுக்குள்ளாக நிலைப்பதை உறுதி செய்திருக்கிறது.
சாம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதிபெற்ற நியூகேசில்

இங்கிலாந்தின் பிரீமியா் லீக் கால்பந்து போட்டி இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், நியூகேசில் அணி முதல் 4 இடங்களுக்குள்ளாக நிலைப்பதை உறுதி செய்திருக்கிறது. இதன் மூலம், சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதிபெற்றுள்ளது அந்த அணி.

பிரீமியா் லீக் போட்டியில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள், ஐரோப்பிய கண்டத்தின் பிரதான கால்பந்து போட்டியாக இருக்கும் சாம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதிபெறும். இந்நிலையில், 38 சுற்றுகள் அடங்கிய பிரீமியா் லீக் போட்டியில், நியூகேசில் தனது 37-ஆவது ஆட்டத்தில் லெய்செஸ்டா் சிட்டியுடன் கோலின்றி செவ்வாய்க்கிழமை டிரா செய்தது.

இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் அந்த அணி 70 புள்ளிகளுடன் தற்போது 3-ஆவது இடத்தில் இருக்கிறது. 69 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் இருக்கும் மான்செஸ்டா் யுனைடெட் 36 ஆட்டங்களே விளையாடியிருக்கும் நிலையில், எஞ்சிய இரு ஆட்டங்களில் வென்று முன்னிலை பெற்றாலும், நியூகேசிலுக்கு 4-ஆவது இடம் உறுதியாகும்.

சரிந்த ஜுவென்டஸ்: இதனிடையே, இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில், ஜுவென்டஸ் அணி 2-ஆவது இடத்திலிருந்து 7-ஆவது இடத்துக்கு சரிந்திருக்கும் நிலையில், அந்த அணிக்கான சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளது.

கிளப்பின் கணக்குகளை தவறாக கையாண்ட விவகாரத்தில் அந்த அணிக்கு 10 புள்ளிகள் அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து புள்ளிகள் குறைப்பு காரணமாக ஜுவென்டஸ் இந்த பின்னடைவை சந்தித்திருக்கிறது. சீரி ஏ போட்டியிலும் முதல் 4 இடங்களில் இருக்கும் அணிகளே சாம்பியன்ஸ் லீக்குக்கு தகுதிபெறும். போட்டியில் இன்னும் 2 ஆட்டங்களே ஜுவென்டஸுக்கு எஞ்சியிருப்பதால் அந்த அணிக்கான சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பு கை நழுவிச் செல்லும் நிலையில் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com