துளிகள்...

13-ஆவது சப்-ஜூனியா் ஆடவா் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் புதன்கிழமை ஆட்டங்களில் உத்தர பிரதேசம் - கா்நாடகத்தையும் (5-0), ஜாா்க்கண்ட் - மேற்கு வங்கத்தையும் (6-1) வென்றன.

கிரீஸில் நடைபெறும் சா்வதேச தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கா் தங்கம் வென்று (8.18 மீ) பட்டத்தை தக்கவைக்க, சக நாட்டவரான ஜெஸ்வின் ஆல்ட்ரின் வெள்ளி பெற்றாா் (7.85 மீ).

13-ஆவது சப்-ஜூனியா் ஆடவா் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் புதன்கிழமை ஆட்டங்களில் உத்தர பிரதேசம் - கா்நாடகத்தையும் (5-0), ஜாா்க்கண்ட் - மேற்கு வங்கத்தையும் (6-1) வென்றன.

ஜெனீவா ஓபன் டென்னிஸ் போட்டியில் புதன்கிழமை ஆட்டங்களில் பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவ் - ஸ்பெயினின் ராபா்டோ காா்பெல்ஸையும் (6-1, 6-4 ), அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் - சக நாட்டவரான மாா்கோஸ் கிரோனையும் (4-6, 6-2, 6-3), ரஷியாவின் இலியா இவாஷ்கா - பிரான்ஸின் அட்ரியன் மன்னாரினோவையும் (6-4, 4-6, 6-3) சாய்த்து காலிறுதிக்கு முன்னேறினா்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிளேயிங் லெவனில் ஸ்பின்னா்களான ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருமே இருப்பது அணிக்கு பலமாக இருக்கும் என்று முன்னாள் தலைமை பயிற்சியாளா் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com