ஐபிஎல் 2023: பரிசுத் தொகை விவரம் - சிஎஸ்கேவிற்கு எவ்வளவு கிடைக்கும்?
By DIN | Published On : 27th May 2023 01:23 PM | Last Updated : 27th May 2023 01:23 PM | அ+அ அ- |

கோப்புப் படம்
2008 முதல் வருடம் ஒருமுறை ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. உலகிலேயே மிகவும் முக்கியமான தொடராகவும் முன்னேறிவருகிறது. மேலும் மற்றைய கிரிக்கெட் தொடர்களை விடவும் அதிகப் பரிசுத் தொகையை அளிப்பதாகவும் ஐபிஎல் வளர்ந்துள்ளது.
முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 13 கோடியும் வழங்கப்படும். 3வது (மும்பை) 4வது (லக்னௌ) அணிக்கு முறையே ரூ. 7 கோடி, 6.5 கோடி ரூபாயும் வழங்கப்படுகிறது. மொத்தம் ரூ.46.50 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் இதை விடவும் அதிகப் பரிசுத் தொகை வழங்கலாம் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: விராட் கோலி சாதனையை முறியடிப்பாரா ஷுப்மன் கில்?
2008 இல் பரிசுத்தொகை முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.4.8 கோடியும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.2.4 கோடியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இதை செய்திருந்தால் வென்றிருப்போம்: ரோஹித் பேட்டி
இதுமட்டுமின்றி அதிக ரன்கள் அடித்தவர்களுக்கு (ஆரஞ்சு கேப்), அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்கு (பர்பிள் கேப்) தலா 15 இலட்சமும், வளர்ந்துவரும் வீரர் விருதிற்கு ரூ.20 இலட்சமும் வழங்கப்படுகிறது. மதிப்புமிக்க வீரர் விருது- ரூ. 12 இலட்சம், சூப்பர் ஸ்டிரைக்கர் விருது - ரூ.15 இலட்சம், கேம் சேஞ்சர் விருது -ரூ. 12 இலட்சம் வழங்கப்பட உள்ளது.
நாளை (மே.28) நடைபெறும் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணியுடன் குஜராத் அணி மோத உள்ளது. சிஎஸ்கே அணி வென்றால் ரூ.20 கோடி கிடைக்கும்.