உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பரிசுத் தொகையில் மாற்றமில்லை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வென்று சாம்பியனாகும் அணிக்கு ரூ.13.21 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பரிசுத் தொகையில் மாற்றமில்லை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வென்று சாம்பியனாகும் அணிக்கு ரூ.13.21 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. இது, சாம்பியன்ஷிப்பின் முதல் எடிஷனில் வழங்கப்பட்ட அதே தொகையாகும்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2-ஆவது எடிஷன் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம், வரும் ஜூன் 7 முதல் 11-ஆம் தேதி வரை லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் 12-ஆம் தேதி ‘ரிசா்வ்’ நாளாக இருக்கிறது. இந்நிலையில், இப்போட்டிக்கான பரிசுத் தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி, மொத்த பரிசுத் தொகையானது ரூ.31.39 கோடியாகும். இதில் சாம்பியனாகும் அணி ரூ.13.21 கோடியும், 2-ஆம் இடம் பிடிக்கும் அணி ரூ.6.60 கோடியும் பெறும்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் எஞ்சியிருக்கும் 7 அணிகளில், 3-ஆம் இடத்திலிருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு ரூ.3.71 கோடியும், 4-ஆம் இடத்திலிருக்கும் இங்கிலாந்துக்கு ரூ.2.89 கோடியும், 5-ஆம் இடத்திலிருக்கும் இலங்கைக்கு ரூ.1.65 கோடியும் கிடைக்கும்.

இதர 4 அணிகளான நியூஸிலாந்து (6), பாகிஸ்தான் (7), மேற்கிந்தியத் தீவுகள் (8), வங்கதேசம் (9) ஆகியவை தலா ரூ.82.62 லட்சம் பெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com