தோனி கை வைத்தால் மண்ணும் தங்கமாகும்: ஆகாஷ் சோப்ரா நெகிழ்ச்சி! 

தோனி கை வைத்தால் மண்ணும் தங்கமாகும்: ஆகாஷ் சோப்ரா நெகிழ்ச்சி! 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக கோப்பையை வென்றுள்ளதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
Published on

ஐபிஎல் போட்டியின் 16-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது. சென்னைக்கு இது 5-ஆவது சாம்பியன் பட்டமாகும். 

ஆட்டநாயகன் விருது கான்வேவிற்கு கிடைத்தது. அவர் 25 பந்துகளில் 47 ரன்கள் அடித்தார். இறுதி ஓவரில் 2 பந்துகளில் 10 ரன்கள் தேவையான போது ஜடேஜா அற்புதமாக அடித்து வெற்றிக்கு வித்திட்டார். தோனி கண்கள் கலங்கி ஜடேஜாவை தூக்கி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த வெற்றி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் பக்கத்தில் கூறியதாவது: 

ஆரஞ்ச் கேப் சுப்மன் கில்லிடம், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் குஜராத் அணி வீரர்களே உள்ளனர். யோசித்து பாருங்கள் கோப்பையை யார் வென்றிருக்க வேண்டும்? ஆனால் நடந்தது வேறு. இதுதான்  தோனி மற்றும் சிஎஸ்கேயின் அழகு. அவர் தொட்டால் மண்ணும் தங்கமாகும். மோகித் சர்மா சிறப்பாக பந்து வீசினாலும் 2 பந்துகளில் ஜடேஜா அடித்து விட்டார். அது சிறப்பான ஒன்றாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com