ஐபிஎல் 2023: விருது வென்றவர்கள் பட்டியல்!
By DIN | Published On : 30th May 2023 02:46 PM | Last Updated : 30th May 2023 02:48 PM | அ+அ அ- |

ஐபிஎல் போட்டியின் 16-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது. சென்னைக்கு இது 5-ஆவது சாம்பியன் பட்டமாகும்.
இதையும் படிக்க: தோனியிடம் தோற்றதில் கவலையில்லை: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி
ஆட்டநாயகன் விருது கான்வேவிற்கு கிடைத்தது. அவர் 25 பந்துகளில் 47 ரன்கள் அடித்தார். இறுதி ஓவரில் 2 பந்துகளில் 10 ரன்கள் தேவையான போது ஜடேஜா அற்புதமாக அடித்து வெற்றிக்கு வித்திட்டார். தோனி கண்கள் கலங்கி ஜடேஜாவை தூக்கி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: சிஎஸ்கே வெற்றியை வெறித்தனமாக கொண்டாடிய ரசிகர்கள்: விடியோ
ஐபிஎல் 2023 தொடரில் விருது பெற்றவர்களின் பட்டியல்:
அதிக ரன்கள் எடுத்தவர் (ஆரஞ்ச் கேப்): ஷுப்மன் கில் (890 ரன்கள்)
அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் (பர்பிள் கேப்): மொஹமது ஷமி (28 விக்கெட்டுகள்)
சிறந்த கேட்ச் : ரஷித் கான்
நீண்ட தூரம் சிக்ஸர் அடித்தவர்: ஃபாப் டு பிளெஸ்ஸி (115 மீ )
அதிக பவுண்டரிகள் அடித்தவர்: ஷுப்மன் கில் (84 பவுண்டரிகள்)
ஆட்டத்தை மாற்றுபவர் விருது (கேம் சேஞ்சர்): ஷுப்மன் கில்
மதிப்புமிக்க வீரர் விருது : ஷுப்மன் கில்
சூப்பர் ஸ்டிரைக்கர் விருது: க்ளென் மேக்ஸ்வெல்
வளர்ந்துவரும் வீரர் விருது: ஜெய்ஸ்வால்
ஃபேர்பிளே விருது: தில்லி அணி.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...