தோனியிடம் தோற்றதில் கவலையில்லை: ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி
By DIN | Published On : 30th May 2023 10:59 AM | Last Updated : 30th May 2023 11:19 AM | அ+அ அ- |

தோனியிடம் தோற்றதில் கவலைப்பட மாட்டேன் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியின் 16-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது. சென்னைக்கு இது 5-ஆவது சாம்பியன் பட்டமாகும்.
இந்த ஆட்டத்தில் முதலில் குஜராத் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் சோ்த்தது. பின்னா் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட, சென்னைக்கான இலக்கு 15 ஓவா்களில் 171 ரன்களாக நிா்ணயிக்கப்பட்டது. அதில் சென்னை 15 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் சோ்த்தது. கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸர் மற்றும் ஃபோரை அடுத்தடுத்து அடுத்து சென்னை அணியை ‘த்ரில்’ வெற்றி பெற வைத்தார் ஜடேஜா.
இதையும் படிக்க | சென்னை 5-ஆவது முறையாக சாம்பியன்
இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு ஹர்திக் பாண்டியா பேசுகையில்,
தோனி வெற்றி பெற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வெற்றி அவருக்கானது என்று விதி எழுதப்பட்டிருக்கிறது. அவருக்கு எதிராக தோல்வி அடைந்ததை நினைத்து கவலைப்பட மாட்டேன். நான் கடந்தாண்டு கூறினேன், நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும் என்று. நான் சந்தித்த சிறந்த மனிதர்களில் தோனியும் ஒருவர்.
இதையும் படிக்க | அடுத்தாண்டும் விளையாட விரும்புகிறேன்: தோனி
சென்னை அணி எங்களைவிட நல்ல கிரிக்கெட்டை விளையாடினார்கள். சாய் சுதர்ஷன் சிறப்பாக விளையாடினார் எனத் தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...