இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஃபார்முக்கு வந்ததை என்னால் பார்க்க முடிந்தது. அந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியைத் தழுவியிருந்தாலும், எங்களுக்கு அந்தப் போட்டி நம்பிக்கையளித்தது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடி கிட்டத்தட்ட 300 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுக்கு எதிரான பல போட்டிகளில் வெற்றிக்கு மிக அருகில் சென்று தோல்வியடைந்தது. ஆசியக் கோப்பையிலும் அதே நிலையே தொடர்ந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்தப் போட்டிக்கு நாங்கள் எங்களை மேலும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேற நாங்கள் நிறைய உழைக்க வேண்டியுள்ளது. இருப்பினும், இந்த உலகக் கோப்பை ஆப்கானிஸ்தான் மகிழ்ச்சியடைவதற்கு பல விஷயங்களை அளித்துள்ளது என்றார்.