
உலகக் கோப்பை தொடரில் தொடர் தோல்வியை அடுத்து இலங்கை அணியின் கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்நாட்டு விளையாட்டு அமைச்சர் ரோஷன் ரணசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால வாரிய தலைவராக அர்ஜுனா ரணதுங்காவை நியமித்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இடைக்கால கிரிக்கெட் வாரியத்தில் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிராக 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து இலங்கை அமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 33-ஆவது ஆட்டத்தில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வியாழக்கிழமை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம், ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் தனது அதிகபட்ச ரன் வித்தியாசத்திலான வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. இதையடுத்து முதல் அணியாக அரையிறுதிக்குத் தகுதிபெற்றது இந்தியா. மறுபுறம், 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 5-ஆவது தோல்வியை சந்தித்த இலங்கை, போட்டியிலிருந்து வெளியேறும் விளிம்பு நிலையில் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.