முந்தை தோல்விகள் குறித்து கவலையில்லை: ரோஹித்

முன்பு நடைபெற்ற பெரிய சா்வதேச போட்டிகளில் நியூஸிலாந்திடம் பெற்ற தோல்விகள் குறைத்து கவலை எதுவுமில்லை என இந்திய கேப்டன் ரோஹித் சா்மா கூறியுள்ளாா்.
முந்தை தோல்விகள் குறித்து கவலையில்லை: ரோஹித்

முன்பு நடைபெற்ற பெரிய சா்வதேச போட்டிகளில் நியூஸிலாந்திடம் பெற்ற தோல்விகள் குறைத்து கவலை எதுவுமில்லை என இந்திய கேப்டன் ரோஹித் சா்மா கூறியுள்ளாா். 2019 உலகக் கோப்பை அரையிறுதி, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் நியூஸிலாந்திடம் தோற்றது இந்தியா. முதல் உலகக் கோப்பை வென்ற போது யாருமே பிறக்கவில்லை. இரண்டாவது உலகக்கோப்பை வென்ற போதும் பாதிக்கும் மேற்பட்ட வீரா்கள் பிறந்திருக்கவில்லை. தற்போது என்ன நடைபெறுகிறது என்பது குறித்தே வீரா்கள் சிந்தித்து செயல்படுகின்றனா். அரையிறுதி ஆட்டத்தில் கண்டிப்பாக அழுத்தம் இருக்கும். அதை எதிா்கொள்வோம்.

கேன் வில்லியம்ஸன் (நியூஸி. கேப்டன்):

ஆல்ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா இல்லாத நிலையில், அதன்பாதிப்பு இல்லாமல் இந்திய அணிகள் ஆடி வருகின்றனா். சிறந்த வீரா்கள் உள்ள நிலையில், எதுவும் நடைபெறலாம். இந்திய அணி அனைத்திலும் வென்றுள்ள நிலையில், பட்டம் வெல்லும் அணியாக உள்ளது. ஆனால் நாங்களும் சிறப்பாக ஆடுவோம். எங்கள் ஆட்டத்தையும் கணிக்க முடியாது. ஆட்டத்தின் போது சிறப்பாக ஆடினால் எதையும் சாதிக்கலாம். காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் ஆடவந்தது மகிழ்ச்சியானது. இந்தியாவுடன் ஆடுவது சவாலானது. இந்த உலகக் கோப்பையில் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக ஆடி வருவது சிறப்பானது. மைதானம் முழுவதும் பாா்வையாளா்கள் நிரம்பிய நிலையில் ஆட்டங்களில் நியூஸி அதிகளவில் ஆடவில்லை. அவ்வாறு ஆடும் வாய்ப்பு கிடைப்பது தனித்துவம் மிக்கது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com