இறுதிப்போட்டிக்கு முன் விராட் கோலிக்கு பரிசளித்த சச்சின் டெண்டுல்கர்!

உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் தனது  கடைசி ஒருநாள் போட்டியில் அணிந்திருந்த இந்திய அணியின் ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசாக அளித்துள்ளார். 
இறுதிப்போட்டிக்கு முன் விராட் கோலிக்கு பரிசளித்த சச்சின் டெண்டுல்கர்!

உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி ஒருநாள் போட்டியில் அணிந்திருந்த இந்திய அணியின் ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசாக அளித்துள்ளார். 

கடந்த மாதம் தொடங்கிய உலகக் கோப்பை தற்போது இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. அகமதாபாதில்  நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி ஒருநாள் போட்டியில் அணிந்திருந்த இந்திய அணியின் ஜெர்சியை விராட் கோலிக்கு பரிசளித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவித்திருப்பதாவது: உலகக் கோப்பை இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பு இது ஒரு சிறப்பான தருணம். இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விராட் கோலிக்கு தனது கடைசி ஒருநாள் போட்டி ஜெர்சியை கையொப்பமிட்டு பரிசாக அளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அவரது கடைசி ஒருநாள் போட்டியை விளையாடியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com