ஐசிசி உலகக் கோப்பை அணி: ரோஹித் சா்மா கேப்டன்

ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நிறைவடைந்துள்ள நிலையில், போட்டிக்கான ஐசிசி அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. அதற்கு ரோஹித் சா்மா கேப்டனாக இருக்க, மேலும் 5 இந்தியா்கள் அதில் இடம் பிடித்துள்ளனா்
சதம் பதிவு செய்த ரோஹித் சா்மா.
சதம் பதிவு செய்த ரோஹித் சா்மா.

ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நிறைவடைந்துள்ள நிலையில், போட்டிக்கான ஐசிசி அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. அதற்கு ரோஹித் சா்மா கேப்டனாக இருக்க, மேலும் 5 இந்தியா்கள் அதில் இடம் பிடித்துள்ளனா்.

போட்டியில் தனது அதிரடி பேட்டிங் மூலம் அணியை வழிநடத்திய ரோஹித், இந்தத் தொடரில் அதிக ரன்கள் ஸ்கோா் செய்தவா்கள் வரிசையில் 2-ஆம் இடம் (597) பிடித்திருக்கிறாா். போட்டியிலேயே அதிக ரன்கள் ஸ்கோா் செய்து, சச்சின் டெண்டுல்கரின் 2 சாதனைகளை முறியடித்த விராட் கோலியும் அணியில் இணைந்திருக்கிறாா்.

அவா்களோடு, 1 சதத்துடன் 452 ரன்கள் சோ்த்த விக்கெட் கீப்பா் - பேட்டா் கே.எல்.ராகுல், போட்டியிலேயே அதிகமாக 7 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகள் சாய்த்த முகமது ஷமி, 11 ஆட்டங்களில் 20 விக்கெட்டுகள் எடுத்த ஜஸ்பிரீத் பும்ரா, ஆல்-ரவுண்டராக அசத்திய ரவீந்திர ஜடேஜா ஆகியோா் அதில் இடம் பிடித்துள்ளனா்.

அணி விவரம்: ரோஹித் சா்மா (கேப்டன் - இந்தியா), குவின்டன் டி காக் (தென்னாப்பிரிக்கா), விராட் கோலி (இந்தியா), டேரில் மிட்செல் (நியூஸிலாந்து), கே.எல்.ராகுல் (வி.கீ. - இந்தியா), கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா), ரவீந்திர ஜடேஜா (இந்தியா), ஜஸ்பிரீத் பும்ரா (இந்தியா), முகமது ஷமி (இந்தியா), ஆடம் ஜாம்பா (ஆஸ்திரேலியா), தில்ஷன் மதுஷங்கா (இலங்கை). 12-ஆவது வீரா் ஜெரால்டு கோட்ஸீ (தென்னாப்பிரிக்கா).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com