தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

டிச. 10 முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா விளையாட்டுப் போட்டிகள்!

மாற்றுத்திறனாளிகளுக்கான கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் 10 ஆம் தேதி  தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

Published On :

மாற்றுத்திறனாளிகளுக்கான கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் 10 ஆம் தேதி  தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 1,350க்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள், துப்பாக்கிச்சூடு, வில்வித்தை, கால்பந்து, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல் போட்டி என மொத்தம் 7 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. 

இதுகுறித்து அமைச்சர் அனுராக் தாக்குர்  தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள விடியோவில் கூறியிருப்பதாவது, “நாட்டில் முதன்முறையாக  கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் மாதம்  நடைபெற உள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புதுதில்லியில் இந்திய விளையாட்டுத் துறை ஆணையத்தின் 3 திடல்களில் மொத்தம் 7 பிரிவுகளில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் திருப்புமுனையாக அமையும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தில்லியில் உள்ள ஐஜி திடல், துக்ளகாபாத் மற்றும் ஜேஎல்என் திடலில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்சௌவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஜொலித்த நட்சத்திர வீரர், வீராங்கனைகளான ஷீடால் தேவி, பாவினா பட்டேல், ஏக்தா பியான், நீரஜ் யாதவ்,   சிங்ராஜ், மணீஷ், சோனல், ராகேஷ் குமார் மற்றும் சரிதா ஆகியோர்  தங்களுடைய சொந்த மாநிலங்கள் தரப்பில் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.