கேப்டனாக முதல் வெற்றி; சூர்யகுமார் யாதவ் பேசியது என்ன?

இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய முதல் போட்டியிலேயே அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது பெருமையாக இருப்பதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கேப்டனாக முதல் வெற்றி; சூர்யகுமார் யாதவ் பேசியது என்ன?
Published on
Updated on
1 min read

இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய முதல் போட்டியிலேயே அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது பெருமையாக இருப்பதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடர் முடிவடைந்த சில நாட்களிலேயே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தொடங்கியுள்ளது.  5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று (நவம்பர் 23) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில்  இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். அதில் 9  பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இந்திய அணியின் கேப்டனாக முதல் போட்டியிலேயே அணிக்கு வெற்றிப் பெற்றுத் தந்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

இந்த நிலையில், இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய முதல் போட்டியிலேயே அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது பெருமையாக இருப்பதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே அணிக்கு வெற்றி பெற்றுத் தந்துள்ளது பெருமையளிக்கிறது. இஷான் கிஷன் சிறப்பாக விளையாடினார். அவருடன் அமைத்த பார்ட்னர்ஷிப் நான் அதிரடியாக விளையாடுவதற்கு உதவியது. பயமின்றி போட்டியை வென்று கொடுக்க வேண்டும் என்பது எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அதனால் எந்த ஒரு அச்சமுமின்றி விளையாடினேன். இறுதிக்கட்டத்தில் ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி  பெறச் செய்தார். அழுத்தமான சூழலில்  சிறப்பாக விளையாடிய அவர் 14  பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். பதற்றமின்றி அவர் பேட்டிங் செய்த விதம் சிறப்பாக இருந்தது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com