வாழ்வா? சாவா? மனநிலையில் கே.எல்.ராகுல் விளையாடவில்லை: பாகிஸ்தான் முன்னாள் வீரர்

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பயத்துடன் விளையாடியதாக உணர்வதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
வாழ்வா? சாவா? மனநிலையில் கே.எல்.ராகுல் விளையாடவில்லை: பாகிஸ்தான் முன்னாள் வீரர்

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பயத்துடன் விளையாடியதாக உணர்வதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6-வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சில் இந்திய அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் 107 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உலகக் கோப்பையின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணியின் தோல்வி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பயத்துடன் விளையாடியதாக உணர்வதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் தோல்விக்கு ஏதேனும் குறிப்பிட்ட காரணங்களை தேர்ந்தெடுக்கக் கூறினால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வாழ்வா? சாவா? போட்டியைப் போன்ற மனநிலையில் விளையாடியிருக்க வேண்டும்  என்று கூறுவேன். கே.எல்.ராகுல் மனதில் என்ன எண்ணம் ஓடியிருக்கும் என்பதை  என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஜடேஜாவின் விக்கெட்டுக்குப் பிறகு அணியில் பெரிய ஷாட்களை விளையாடும் அளவிற்கு பேட்டிங் இல்லை. கே.எல்.ராகுல் நிலைத்து நின்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் சூழலுக்கு ஆளாக்கப்பட்டார். அதனால், அவர் ஆட்டமிழக்காமல் இருப்பதை உறுதிசெய்ய சவாலான ஷாட்களை தேர்ந்தெடுக்கவில்லை.

ஹார்திக் பாண்டியா அணியில் இருந்திருந்தால், கே.எல்.ராகுல் சவாலான ஷாட்களை ஆடியிருப்பார்.  நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் பெரிய ஷாட்களுக்கு முயற்சி செய்து விக்கெட்டை இழந்திருந்தால் அதற்கும் அவர் மீது விமர்சனங்கள் குவிந்திருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com