

இந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுத் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்கிறது.
ஆஸ்திரேலிய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கிளன் மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் ஸாம்பா இன்றையப் போட்டியில் விளையாடுகின்றனர். இந்திய அணியை பொறுத்தவரையில், எந்த ஒரு மாற்றமுமின்றி முதல் டி20 போட்டியில் களமிறங்கியே அதே அணியுடன் களம் காண்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.