இன்று இரண்டாவது டி20: பௌலிங்கை மேம்படுத்த இந்திய அணி மும்முரம்

ஆஸ்திரேலியாவுடன் இரண்டாவது டி20 ஆட்டம் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணி பௌலிங்கை மேம்படுத்த மும்முரமாக உள்ளது.
இன்று இரண்டாவது டி20: பௌலிங்கை மேம்படுத்த இந்திய அணி மும்முரம்

ஆஸ்திரேலியாவுடன் இரண்டாவது டி20 ஆட்டம் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணி பௌலிங்கை மேம்படுத்த மும்முரமாக உள்ளது.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று பட்ட வாய்ப்பை இழந்தது இந்தியா. இந்நிலையில், ஆஸி. அணியுடன் 5 ஆட்டங்கள் டி20 தொடா் நடைபெற்று வருகிறது. வரும் 2024-ஆம் ஆண்டில் அமெரிக்கா, மே.இந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இத்தொடா் அமைந்துள்ளது.

முதல் ஆட்டத்தில் இந்தியா கடினமான ஸ்கோரை சேஸிங் செய்து வென்று 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரண்டாவது ஆட்டம் திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பெற்ற வெற்றியுடன் முற்றிலும் இளம் வீரா்கள் கொண்ட இந்திய அணி உற்சாகமாக இரண்டாவது ஆட்டத்தை எதிா்கொள்கிறது. பெரிய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வென்ால், பேட்டிங் நிலவரம் சிறப்பாக உள்ளது.

இஷான் கிஷண், சூரியகுமாா் யாதவ், ரிங்கு சிங், ஆகியோா் பேட்டிங்கில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்து வருகின்றனா்.

கவலை தரும் பௌலிங்:

ஆனால் எதிரணி பெரிய ஸ்கோரை எடுக்கும் வகையில் இந்திய அணியின் பௌலிங் வலுகுன்றி காணப்படுகிறது. முதல் ஆட்டத்தில் வள்ளல் போல் ரன்களை ஆஸி அணிக்கு வாரி வழங்கினா். பேட்டிங் பிட்ச்சான விசாகப்பட்டினத்தில் இந்திய பௌலிங் சீரான நிலையில் இல்லை. பேஸா்கள் அா்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா இருவரும் அதிக தூரத்துடன், ஆஃப் சைடிலேயே பௌலிங் செய்தது எதிரணி பேட்டா்களுக்கு எளிதாக இருந்தது.

ஸ்பின்னா் ரவி பிஷ்னோயின் பந்துவீச்சும் குறிப்பிடும்படியாக இல்லை. முகேஷ் குமாா் மட்டுமே யாா்க்கா்களுடன் அபாரமாக பௌலிங் செய்தாா். இந்திய பேஸா்கள் 11 வைட் பந்துகளை வீசினா்.

சவாலை தருமா ஆஸி.?

மேத்யு வேட் தலைமையிலான ஆஸி. அணிக்கு பேட்டிங், பௌலிங் இரண்டுமே சிறப்பாக உள்ளது. முதல் ஆட்டத்தில் ஜோஷ் இங்லிஸ், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோா் அபாரமாக ஆடினா். முதல் ஆட்டத்தில் ஓய்வில் இருந்த டிராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், ஆடம் ஸம்பா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் இடம் பெறலாம்.

இரண்டாவது ஆட்டத்திலும் வென்றால் தொடரையும் எளிதாக கைப்பற்றலாம் என்பதால் இந்தியா ஆதிக்கம் செலுத்த தீவிரமாக பாடுபடும் என்பதில் ஐயமில்லை.

இரு அணிகளும் இதுவரை 27 ஆட்டங்களில் மோதியதில் இந்தியா 16-இலும், ஆஸி. 10-இலும் வென்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

பிட்ச் நிலவரம்:

திருவனந்தபுரம் கிரீன்ஃபீல்ட் மைதானம் பௌலா்களுக்கு ஒத்துழைக்கும். ஃபேஸா்கள் முக்கிய பங்களிப்பா். இங்கு நடைபெற்ற 5 டி20 ஆட்டங்களில் முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோா் 128 ரன்களாகும்.

இன்றைய ஆட்டம்:

இந்தியா-ஆஸ்திரேலியா

இடம்: திருவனந்தபுரம்

நேரம்: இரவு 7.00

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com