எனது அனைத்து ஷாட்களையும் விளையாட முயற்சி செய்கிறேன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால்

எனது அனைத்து ஷாட்களையும் விளையாட முயற்சி செய்கிறேன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால்

தனது அனைத்து ஷாட்களையும் விளையாடவும், அச்சமின்றி பந்துவீச்சாளர்களை  எதிர்கொள்ளவும் முயற்சிப்பதாக இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

தனது அனைத்து ஷாட்களையும் விளையாடவும், அச்சமின்றி பந்துவீச்சாளர்களை  எதிர்கொள்ளவும் முயற்சிப்பதாக இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று (நவம்பர் 26) திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. நேற்றையப் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தார். அதிரடியாக விளையாடிய அவர் 25  பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது அதிரடியான ஆட்டம் அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் அழுத்தமின்றி விளையாட உதவியது.

இந்த நிலையில், தனது அனைத்து ஷாட்களையும் விளையாடவும், அச்சமின்றி பந்துவீச்சாளர்களை  எதிர்கொள்ளவும் முயற்சிப்பதாக இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  போட்டி முடிவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இது எனக்கு மிகவும் சிறப்பான தருணம். நான் என்னுடைய அனைத்து விதமான ஷாட்களையும் விளையாட முயற்சி செய்தேன். பந்துவீச்சாளர்களை  அச்சமின்றி எதிர்கொண்டு ஷாட்களை விளையாடினேன். நான் எந்த மாதிரியான ஷாட்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்பதில் உறுதியாக இருந்தேன். கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஸ்மன் என்னை சுதந்திரமாக விளையாடக் கூறினார்கள். அணியில் அனுபவமிக்க வீரர்கள் இருக்கும்போது நான் எப்போதும் எனது திறமைகளை வளர்த்துக் கொள்வது என்பது குறித்தே சிந்திப்பேன். நான் நாள்தோறும் கற்றுக் கொண்டிருக்கிறேன். உடலுறுதியிலும், மன உறுதியிலும்  தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன். ஒவ்வொரு நாளும் எனது திறமைகளை வளர்த்துக் கொள்கிறேன் என்றார்.

இந்திய அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை 2 டெஸ்ட் மற்றும்  10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com