ஐபிஎல்: மும்பை அணிக்கு திரும்பினார் ஹாா்திக் பாண்டியா

இந்தியன் ப்ரீமியர் லீக் 2024ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் தொடருரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கே ஹார்திக் பாண்டிய திரும்பியிருக்கிறார்.
ஹாா்திக் பாண்டியா
ஹாா்திக் பாண்டியா

இந்தியன் ப்ரீமியர் லீக் 2024ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் தொடருரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கே ஹார்திக் பாண்டிய திரும்பியிருக்கிறார். இதனை அவரே தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

ஹார்திக் பாண்டியாவின் ஐபிஎல் ஏல மதிப்பு ரூ.15 கோடி. இவரை குஜராத் டைட்டன்ஸ் வைத்திருக்கும் நிலையில், ஹார்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பும் நிலையில், அவர் இந்தத் தொகையுடன் பணப்பரிமாற்ற கட்டணத்தையும் செலுத்த நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியன் ப்ரீமியா் லீக் 2024 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகளில் வீரா்கள் தக்க வைக்கப்பட்டும், விடுவிக்கப்பட்டும் உள்ளனா்.

உலகளவில் கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஐபிஎல் தொடா் ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கான பணம் புரளம் செல்வாக்கு மிக்க லீக் தொடராக ஐபிஎல் உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள 10 அணிகள் சிறந்த வீரா்களை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் வாங்குகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் தொடா் வீரா்களுக்கான ஏலம் வரும் டிச. 19-ஆம் தேதி துபையில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணிக்கு நிகழாண்டு ஏலத்துக்காக ரூ.100 கோடி உள்ளது. கடந்த ஆண்டு ரூ.95 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வீரருக்கும் இது மூன்றாவது மற்றும் இறுதி 3 ஆண்டுகள் ஒப்பந்தமாக அமையவுள்ளது.

இந்நிலையில் அணிகள் வீரா்களை தக்க வைக்கவும், விடுவிக்கவும் நவ. 26-ஆம் தேதி மாலை 5 மணி அவகாசம் அளிக்கப்பட்டது.

முதல் அணியாக நடப்பு சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி தங்களது தக்க வைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரா்களின் விவரங்களை வெளியிட்டது. பின்னா் மற்ற அணிகளும் இதுதொடா்பாக அறிவிப்பை வெளியிட்டன.

சென்னை சூப்பா் கிங்ஸ் அணியில் விடுவிக்கப்பட்ட வீரா்கள்: பென் ஸ்டோக்ஸ், டிவைன் பிரிட்டோரியஸ், பகத் வா்மா, சுப்ரன்ஷு சேனாபதி, அம்பதி ராயுடு, கெய்ல் ஜேமிஸன், ஆகாஷ் சிங், சிஸன்டா மகலா.

தக்க வைக்கப்பட்ட வீரா்கள்: தோனி (கேப்டன்), மொயின் அலி, தீபக் சஹாா், டேவன் கான்வே, துஷாா் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்யவா்த்தன், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சௌதரி, மதிஸா பதிராணா, ரஹானே, ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்நா், சிம்ரஞ்சித் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மஹீஷ் திக்ஷனா.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் விடுவிக்கப்பட்ட வீரா்கள்: யாஷ் தயால், கேஎஸ் பாரத், ஷிவம் மவி, உா்வில் படேல், பிரதீப் சங்வான், ஒடேன் ஸ்மித், அல்ஸாரி ஜோஸப், தஸுன் ஷனகா.

தக்க வைக்கப்பட்ட வீரா்கள்: ஹாா்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லா், ஷுப்மன் கில், மேத்யு வேட், ரித்திமான் சாஹா, கேன் வில்லியம்ஸன், அபிநவ் மனோகா், சாய் சுதா்ஸன், தா்ஷன் நல்கண்டே, விஜய் சங்கா், ஜெயந்த் யாதவ், ராகுல்தேவாட்டியா, முகமது ஷமி, நூா் அகமது, சாய் கிஷோா், ரஷீத் கான், ஜோஷ்வா லிட்டில், மொகித் சா்மா.

மும்பை இண்டியன்ஸ் அணியில் விடுவிக்கப்பட்ட வீரா்கள்: மொகமது அா்ஷத் கான், ரமண்தீப் சிங், ஹிா்திக் ஷோகீன், ராகவ் கோயல், ஜோஃப்ரா ஆா்ச்சா், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவான் ஜேன்ஸன், ஜை ரிச்சா்ட்ஸன், ரைலி மொ்டித், கிறிஸ் ஜோா்டான், சந்தீப் வாரியா்.

தக்கவைக்கப்பட்ட வீரா்கள்: ரோஹித் சா்மா (கேப்டன்), டேவால்ட் பிரெவிஸ், சூா்யகுமாா் யாதவ், இஷான் கிஷண், திலக் வா்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அா்ஜுன் டெண்டுல்கா், கேமரூன் கிரீன், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, பும்ரா, குமாா் காா்த்திகேயா, பியுஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேஸன் பெஹ்ரண்டாா்ஃப்.

வாங்கப்பட்ட வீரா்: ரோமாரியோ ஷெப்பா்ட் (லக்னௌ அணியில் இருந்து) என பட்டியல்கள் வெளியாகின.

அந்த வகையில், ஹார்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பவில்லை, குஜராத் டைட்டன்ஸ் அணியே தக்க வைத்துக்கொண்டதாக நேற்று வரை கூறப்பட்டது.

இதனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹார்தியா திரும்புகிறாரா என்பது சர்ச்சைக்குரிய விஷயமாகவே நேற்று சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.  இதற்கிடையே, தனது யூடியூப் பக்கத்தில் பிரபல தென்னாப்ரிக்க வீரரும் ஆர்சிபி வீரருமான ஏபி டி வில்லியர்ஸ், ஹார்திக் பாண்டியா மும்பை அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார் என்று தெரிவித்து பரபரப்பைக் கூட்டியிருந்தார்.

நேற்று முதல் இன்று ஹார்திக் பாண்டியா அறிவிக்கும் வரை இந்த சர்ச்சை நீண்டுகொண்டேயிருந்தது. இதற்குக் காரணம், நவம்பர் 26ஆம் தேதி, அணிகள் தங்களது வீரர்களை தக்க வைத்துக்கொள்ளத்தான் கடைசிநாள். ஆனால் வீரர்களை வாங்குவது என்பது டிசம்பர் 12ஆம் தேதி வரை நடைபெறும். அதாவது துபையில் டிசம்பர் 19ஆம் தேதி ஏலம் நடைபெறவிருப்பதால், இந்த வாங்கும் - விற்கும் நடவடிக்கைகள் ஏலம் தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு வரை நடைபெறும்.

எனவே, டிசம்பர் 12ஆம் தேதிக்குள் ஹார்த்திக் பாண்டியாவை ஒரு அணியால் வாங்க முடியும். குஜராத் டைட்டன்ஸ் அணி, வீரர்களின் பட்டியலை வெளியிட்ட இரண்டு மணி நேரத்தில், ஹார்திக் பாண்டியாவை, குஜராத் டைட்டன்ஸ் அணியிடமிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கையெழுத்திட்டதாக செய்திகள் வெளியாகின. அதன்பிறகுதான் இது தொடர்பான மீம்ஸ்களும் பறந்தன.

ஆனால், இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணியோ அல்லது குஜராத் டைட்டன்ஸ் அணியோ ஹார்திக் பாண்டியா தொடர்பான செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காததால்தான் இந்த பரபரப்பு நீடித்தது. இந்த நிலையில், சற்று முன், தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பியதை ஹார்திக் பாண்டியாவே உறுதி செய்திருப்பது ஐபிஎல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கூட்டியிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com