கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்புஇசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

எப்போதும் எங்களுக்கு ஆதரவளிக்க சூர்யகுமார் இருக்கிறார்: பிரசித் கிருஷ்ணா

டி20 போட்டிகளில் பேட்டிங் செய்வது போன்றே இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Published On :2 பிப்ரவரி 2024, 8:56 am IST

டி20 போட்டிகளில் பேட்டிங் செய்வது போன்றே இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும்  ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று (நவம்பர் 26) நடைபெற்றது. இந்தப் போட்டியில்  இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதன்மூலம், 5  போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில்  உள்ளது. நேற்றையப் போட்டியில் இந்திய அணியின் தரப்பில் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  

இந்த நிலையில், டி20 போட்டிகளில் பேட்டிங் செய்வது போன்றே இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துவதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான பிரசித் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பேட்டிங்கில்  எந்த ஒரு பதற்றமுமின்றி செயல்படுவதுபோல இந்திய அணியை வழிநடத்துவதிலும் பதற்றமின்றி சூர்யகுமார் யாதவ் செயல்படுகிறார். அவர் வீரர்கள் அனைவரின்  மீதும் நம்பிக்கை வைத்துள்ளார். வீரர்களுக்கு எல்லா விதத்திலும் அவர் ஆதரவளிக்கிறார். ஏதேனும் ஒரு விஷயம் தவறுதலாகப் போனால் அவர் எங்களுக்கு ஆதரவளிக்கத் தவறியதே இல்லை. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வீரர்களை சுதந்திரமாக விளையாடுமாறு கூறுவார். மும்பை இந்தியன்ஸ் அணியில் அவருடன் விளையாடும் சக வீரரான சூர்யகுமார் யாதவும் அவரைப் போன்றே வீரர்களை சுதந்திரமாக விளையாடுமாறு அறிவுறுத்துகிறார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.