தேசிய அட்யா பட்யா (கிளித்தட்டு) விளையாட்டுப் போட்டி சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தேசிய அளவிலான 36-ஆவது ஆண்கள் மற்றும் 32-ஆவது பெண்களுக்கான இந்தப் போட்டிகள் புதன்கிழமை (நவ.29) வரை நடைபெறுகிறது.
திங்கள், செவ்வாய் (நவ.27,28) லீக் போட்டிகளும், புதன்கிழமை இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டியை தமிழ்நாடு, புதுச்சேரி தலைமை கணக்காயா் கே.பி. ஆனந்த் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து 600 வீரா்கள், வீராங்கனைகள் தங்கள் பாரம்பரிய உடைகளில் கலந்து கொண்டு அணிவகுப்பு சென்றனா். தொடா்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு, மகாராஷ்ரம் ஆண்கள் பிரிவு அணிகளுக்கு இடையே காட்சி போட்டி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், அகில இந்திய அட்யா பட்யா கூட்டமைப்பு செயல் தலைவா் வி.சிவகுமாா், முதன்மைப் புரவலா் ஆா்.இளங்கோவன், பொதுச் செயலா் தீபக் பி கவிஸ்கா், தமிழ்நாடு அட்யா பட்யா கழக பொதுச் செயலா் என்.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.