மேக்ஸ்வெல்: முதல் வெற்றியுடன் தொடரை தக்கவைத்தது

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. 
மேக்ஸ்வெல்: முதல் வெற்றியுடன் தொடரை தக்கவைத்தது


குவாஹாட்டி: இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது. 
இதன் மூலம் இந்தத் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்து, தொடரை தக்கவைத்தது ஆஸ்திரேலியா. இந்தியா முதல் தோல்வியை சந்தித்திருக்கிறது. 
இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் சேர்க்க, அடுத்து ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்து வென்றது. கிளென் மேக்ஸ்வெல் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தால் அணியை தோல்விப் பாதையிலிருந்து மீட்டெடுத்தார். 
முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியாவின் இன்னிங்ஸில், தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு வெளியேற, ருதுராஜ் கெய்க்வாட் நிலைத்து நின்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 
மறுபுறம் இஷான் கிஷண் ரன்னின்றி பெவிலியன் திரும்ப, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் சேர்த்து விக்கெட்டை பறிகொடுத்தார். கடந்த இரு ஆட்டங்களில் மோசமாக ஆடிய திலக் வர்மா, இந்த ஆட்டத்தில் நிதானமாக ரன்கள் சேர்த்தார். 
ஓவர்கள் முடிவில் ருதுராஜ் 57 பந்துகளில் 13 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 123, திலக் வர்மா 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலிய பெளலிங்கில் கேன் ரிச்சர்ட்சன், ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப், ஆரோன் ஹார்டி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 
பின்னர் 223 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய ஆஸ்திரேலியாவில் ஆரோன் ஹார்டி 3 பவுண்டரிகளுடன் 16, டிராவிஸ் ஹெட் 8 பவுண்டரிகளுடன் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 3-ஆவது பேட்டரான ஜோஷ் இங்லிஸ் 2 பவுண்டரிகளுடன் 10, மார்கஸ் ஸ்டாய்னிஸ் 2 பவுண்டரிகளுடன் 17, டிம் டேவிட் 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 
4-ஆவது வீரராக வந்த கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவரோடு கேப்டன் மேத்யூ வேட் இணைய, 6-ஆவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்து அணியை அதிரடியாக வெற்றிக்கு வழிநடத்தியது இந்தக் கூட்டணி. ஓவர்கள் முடிவில் மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 8 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 104, வேட் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில் ரவி பிஷ்னோய் 2, அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், அக்ஸர் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com