புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க திட்டம் உள்ளது: பாட் கம்மின்ஸ்

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணியிடம் திட்டம் இருப்பதாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :5 அக்டோபர் 2023, 2:25 pm

DIN

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணியிடம் திட்டம் இருப்பதாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடர் இன்று (அக்டோபர் 5) தொடங்கியது. இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தியா வரும் அக்டோபர் 8 ஆம் தேதி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. 

இந்த நிலையில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணியிடம் திட்டம் இருப்பதாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு ஓரிரு நாள்களே உள்ளன. அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கான பயிற்சியில் ஆஸ்திரேலிய அணி ஈடுபட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அதிக அளவிலான சுழற்பந்துவீச்சை எதிர்கொண்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்தியாவில் அதிகம் விளையாடியுள்ளார்கள். ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் எதிர்கொள்ள எங்களிடம் திட்டமுள்ளது. நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.