
உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையை இலங்கைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் மார்கரம் படைத்துள்ளார்.
உலகக் கோப்பையின் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் மார்கரம் 49 பந்துகளில் சதம் விளாசி உலகக் கோப்பையில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்த 5 வீரர்கள் பின்வருமாறு:
வீரர் | எதிரணி | ஆண்டு | சதம் |
அய்டன் மார்கரம் (தென்னாப்பிரிக்கா) | இலங்கை | 2023 | 49 பந்துகளில் |
கெவின் ஓ பிரையன் (அயர்லாந்து) | இங்கிலாந்து | 2011 | 50 பந்துகளில் |
கிளன் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) | இலங்கை | 2015 | 51 பந்துகளில் |
ஏபி டி வில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா) | மே.இ.தீவுகள் | 2015 | 52 பந்துகளில் |
இயான் மோர்கன் (இங்கிலாந்து) | ஆப்கானிஸ்தான் | 2019 | 57 பந்துகளில் |
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.