பாகிஸ்தானுக்கு எதிராக எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவிப்பார்கள் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது ஆஸ்திரேலியா. இருப்பினும், இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஷ் இங்லிஷைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனால் பேட்டிங் என்பது அந்த அணிக்கு கவலையளிக்கும் விஷயமாகவே உள்ளது. ஆஸ்திரேலியா நாளை (அக்டோபர் 20) பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இதையும் படிக்க: ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகள்: மார்க் ஸக்கர்பெர்க்
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவிப்பார்கள் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பெங்களூரு சின்னசுவாமி போன்ற மைதானத்தில் அதிக ரன்கள் குவிக்க முடியும் என என்னால் தைரியமாக கூற முடியும். இங்குள்ள விக்கெட் பேட்டிங்குக்கு ஏற்றவாறு இருக்கும். அதனால் இந்த ஆடுகளத்தில் பேட்டிங் மிக முக்கியமாக இருக்கும். இலங்கைக்கு எதிரான கடந்த போட்டியில் எங்களுக்கு கிடைத்த தொடக்கம் சிறப்பானதாக இருந்தது. மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் முதல் ஓவரிலிருந்தே அணிக்கு சிறப்பாக ரன் குவிக்கத் தொடங்கினர். இதனையே எங்களது வீரர்களிடமிருந்து நான் எதிர்பார்க்கிறேன். அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். நாளை நடைபெறும் போட்டியில் கண்டிப்பாக அதிக ரன்கள் குவிப்போம். கடந்த போட்டியில் ஜோஷ் இங்லிஷ் சிறப்பாக விளையாடினார். பேட்டிங் அல்லது ஃபீல்டிங்கை தேர்வு செய்வதில் பனிப்பொழிவு முக்கியப் பங்கு வகிக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கும்மிடிப்பூண்டி அருகே இரும்பு உருக்காலையில் பாய்லர் வெடித்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!

ரூ. 100 கோடி மோசடி! திமுக நிர்வாகி மீது பாய்ந்த குண்டர் தடுப்புச் சட்டம்!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!







