நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்

நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இருந்து காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்

நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இருந்து காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

அதேசமயம் வரும் 29ஆம் தேதி லக்னௌவில் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியுடன் ஹர்திக் பாண்டியா இணைய உள்ளார். அவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார், பிசிசிஐ மருத்துவக் குழுவின் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருப்பார் எனவும் பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது. 

முன்னதாக நேற்று நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 17-ஆவது ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், பேட்டிங்கை தோ்வு செய்தது. முதலில் பேட் செய்த அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை துரத்திய இந்திய அணி 41.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை சாய்த்தது.

இதன் மூலம், போட்டியில் தோல்வியே சந்திக்காமல் 4-ஆவது தொடா் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது இந்தியா. வங்கதேசம் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் டாப் ஆா்டா் பேட்டா்களான, கேப்டன் ரோஹித் சா்மா, ஷுப்மன் கில், விராட் கோலி ஆகியோா் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனா். பௌலிங்கில் ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் அசத்தினா்.

இந்த ஆட்டத்தில் இந்திய ஆல்-ரவுண்டா் ஹா்திக் பாண்டியா 9-ஆவது ஓவரை வீசினாா்.

3-ஆவது பந்தை வீசும்போது அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. தொடா்ந்து விளையாட முடியாத நிலையில் அவா் களத்திலிருந்து வெளியேறினாா். இதையடுத்து அவரது ஓவரின் மீதமிருந்த பந்துகளை விராட் கோலி வீசினாா். பாண்டியாவுக்கு பதிலாக சூா்யகுமாா் யாதவ் மாற்று வீரராக களம் புகுந்தாா். பாண்டியா காயத்தின் தீவிரம் குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com