அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புவேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!

ஹாட் ஸ்டாரில் புதிய சாதனை படைத்த இந்தியா - நியூசிலாந்து போட்டி!

இந்தியா - நியூசிலாந்து இடையிலான உலகக் கோப்பை போட்டியை ஹாட் ஸ்டாரில் ஒரே நேரத்தில் 4.3 கோடி பார்வையாளர்கள் கண்டு மகிழ்ந்துள்ளனர். 

Published On :

இந்தியா - நியூசிலாந்து இடையிலான உலகக் கோப்பை போட்டியை ஹாட் ஸ்டாரில் ஒரே நேரத்தில் 4.3 கோடி பார்வையாளர்கள் கண்டு மகிழ்ந்துள்ளனர். 

உலகக் கோப்பையின் ஞாயிற்றுக்கிழமை போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தப் இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இந்த நிலையில் நேற்று நடந்த இந்தியா-நியூசிலாந்து இடையிலான உலகக் கோப்பை போட்டி, ஹாட்ஸ்டாரில் ஒரே நேரத்தில் 4.3 கோடி பார்வையாளர்களை பெற்று டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 

இதற்கு முன்பாக, இந்தியா-பாகிஸ்தான் போட்டி, ஒரே நேரத்தில் 3.5 கோடி பார்வையாளர்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.