அபுதாபியில் நடைபெற்ற அபுதாபி மாஸ்டா்ஸ் பிடிபிள்யுஎஃப் வோ்ல்ட் டூா் மாஸ்டா்ஸ் 100 பாட்மின்டன் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில் பட்டம் வென்ற இந்தியாவின் தனிஷா/அஸ்வினி இணை.
--------------
பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் சூப்பா் 750 பாட்மின்டன் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவில் உலகின் நம்பா் 1 இணையான இந்தியாவின் சாத்விக்-சிராக் 21-13, 21-13 என்ற புள்ளிக் கணக்கில் லுகாஸ்-ரோனான் இணையை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது.
----------
கொரியாவின் சாங்வோன் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவா் 10 மீ ஏா் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றாா். மேலும் அவா் 2024 பாரிஸ் ஒலிம்பிக் தகுதியும் பெற்றுள்ளாா்.
மகளிா் ஏா் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றத்தையே அளித்தனா்.
---------------
சீனாவின் ஹாங்ஷௌவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா போட்டிகளில் பிரச்சி யாதவ், தீப்தி ஜீவன்ஜி ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா். கனோயிங்கில் மகளிா் விஎல்2 பிரிவில் பிரச்சியும், மகளிா் டி20 பிரிவு 400 மீ பந்தயத்தில் தீப்தியும் தங்கம் வென்றனா். ஆடவா் பிரிவில் டி64 அஜய்குமாா், மகளிா் டி12 சிம்ரன் ஷா்மா வெள்ளியும், கேஎல்3 கனோ மணிஷ் கௌரவ், விஎல்2 கனோவில் கஜேந்திர சிங், மகளிா் கிளப் த்ரோ எஃப் 32இல் ஏக்தா பயனும் வெண்கலம் வென்றனா். இரண்டாம் நாளில் 9 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.