பாரா ஒலிம்பிக்: வெண்கலம் வென்றமுத்துராஜாவுக்கு முதல்வா் பாராட்டு
By DIN | Published On : 25th October 2023 12:23 AM | Last Updated : 25th October 2023 12:23 AM | அ+அ அ- |

சென்னை: பாரா ஒலிம்பிக் போட்டியில் வட்டு எறிதல் போட்டியில் வெண்கலம் வென்ற தமிழக வீரா் முத்துராஜாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
முதல்வா் செவ்வாய்க்கிழமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரா்கள் தொடா்ந்து பதக்கங்களை குவித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
அந்த வரிசையில் வட்டு எறிதல் போட்டியில் வெண்கலம் வென்றுள்ள தமிழகத்தைச் சோ்ந்த முத்துராஜாவுக்கு எனது பாராட்டுகள். முத்துராஜா மென்மேலும் சாதித்து, அடுத்தடுத்த போட்டிகளில் தங்கம் வெல்ல வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளாா் முதல்வா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...