கோலி பிறந்தநாள்: மறக்க முடியாததாக மாற்ற காத்திருக்கும் ஈடன் கார்டன்!

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டர் விராட் கோலியின் பிறந்த நாளை கொண்டாட பெங்கால் கிரிக்கெட் வாரியம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றது.
கோப்புப் படம் (விராட் கோலி)
கோப்புப் படம் (விராட் கோலி)

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டர் விராட் கோலியின் பிறந்த நாளை கொண்டாட பெங்கால் கிரிக்கெட் வாரியம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 15 ஆண்டுகளாக விளையாடி வரும் கோலி, பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளார். இதுவரை ஒருநாள் போட்டிகளில் 48 சதங்கள் உள்பட 13,437 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்கள் உள்பட 8,676 ரன்களும் குவித்துள்ளார்.

இந்த நிலையில், வருகின்ற 5-ஆம் தேதி விராட் கோலியின் 35-வது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது.

அன்றைய தினம், இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் உலகக் கோப்பை லீக் போட்டி நடைபெறவுள்ளது.

அந்த போட்டியை காண வரும் 70,000 ரசிகர்களுக்கும் விராட் கோலி முகம் பதித்த முகமூடி வழங்க பெங்கால் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்து வருகின்றது.

இதுகுறித்து செளரவ் கங்குலியின் சகோதரரும், பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான ஸ்னேஹாசிஷ் கங்குலி கூறியதாவது:

“70,000 பார்வையாளர்களுக்கு விராட் கோலியின் முகமூடி கொடுக்க திட்டமிட்டுள்ளோம். விராட் கோலி மைதானத்துக்குள் நடந்து வரும்போது ரசிகர்களை முகமூடி அணிய வலியுறுத்துவோம். மைதானத்தில் கேக் வெட்டவும் ஏற்பாடு செய்துள்ளோம். அந்த நாளை விராட் கோலிக்கு சிறப்பானதாக மாற்றுவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வை நடத்த ஐசிசியிடம் அனுமதி கோரி பெங்கால் கிரிக்கெட் வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com