தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்கரம் 49 ரன்கள் குவித்தார். 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 14.5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. டி20 தொடரையும் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்து மிட்செல் மார்ஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.