கே.எல்.ராகுல், இஷான் கிஷன் ஒன்றாக விளையாடுவார்களா?: ரோஹித் கூறிய பதில்!

உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்  ராகுல், இஷான் கிஷனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கே.எல்.ராகுல், இஷான் கிஷன் ஒன்றாக விளையாடுவார்களா?: ரோஹித் கூறிய பதில்!

உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்  ராகுல், இஷான் கிஷனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனால் இருவரும் ஒரே போட்டியில் களமிறங்குவார்களா என பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது. 

இதற்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “ஆமாம். வாய்ப்பு இருக்கிறது. இஷான் கிஷன் கடைசிப் போட்டியில் சிறப்பாக விளையாடினார். பிளேயிங் லெவனை தேர்வு செய்யும் முன்பு பலவிதமான காரணிகள் உள்ளன. அதயெல்லாம் பார்த்துதான் தேர்வு செய்வோம். அந்த நேரத்தில் அனைவரும் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் முடிவு எடுப்போம்” எனக் கூறியுள்ளார். 

கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். ஆசியக் கோப்பையில் 2 போட்டிகளில் விளையாட முடியவில்லை. ஆனால் அடுத்தடுத்தப் போட்டிகளில் விளையாட உள்ளார். நம்பர்.5இல் ராகுலின் சராசரி சிறப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இஷான் கிஷன்
இஷான் கிஷன்

இஷான் கிஷனும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 4 அரைசதங்களை அடித்துள்ளார். ஆனால் யார் எந்த வரிசையில் விளையாடுவார்கள் என்பது குறித்த  தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. 

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்

ராகுல் 54 போட்டிகளில் 1986 ரன்களும் சராசரி 45.13ஐயும் கொண்டுள்ளார். இஷான் கிஷன் 19 போட்டிகளில் 776 ரன்களும் சராசரி 48.50ஐயும் கொண்டுள்ளார். இருவரும் விக்கெட் கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அக்.5ஆம் நாள் இந்திய மண்ணில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com