சென்னை பிரசிடென்சி கிளப் சார்பில் சர்வதேச மூத்தோர் டென்னிஸ் போட்டி சென்னையில் வரும் செப். 11 முதல் 16 வரை நடைபெறுகிறது. 35, 45 மற்றும் 55 மேற்பட்ட வயதினருக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகிறன.
ஆண்டு தோறும் ஐ.டி. எப் . சீனியர் சர்கியூட் 280 போட்டிகளை நடத்துகிறது, 60 நாடுகளைச் சேர்ந்த 2000 வீரர்கள் கலந்து கொள் றார்கள். முதல் முறையாக ஐடிஎஃப் போட்டியில் பெண்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டம் செப். 8 -ஆம் தேதி தொடங்குகிறது. பிரசிடென்சி கிளப், எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியம் ஆகியஇடங்களில் போட்டி நடைபெறுகிறது. அமெரிக்கா,சிங்கப்பூர், மலேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 150 பேர் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசாக வழங்கப்படுகிறது. இந்த தகவலை போட்டிஅமைப்பு குழு தலைவர் ஷிவராம்செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.