8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவரான மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வதைக் காட்டிலும் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடுவதற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இரண்டு ஐபிஎல் தொடர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஸ்டார்க் விளையாடியுள்ளார். கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அவர் விளையாடியிருந்தார்.
இந்த நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளையாட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வில்லோ டால்க் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மிட்செல் ஸ்டார் பேசியதாவது: ஐபிஎல் போட்டிகளில் விளையாடி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை எதிர்நோக்கியிருக்கிறேன். 20 ஓவர் உலகக் கோப்பை வரவுள்ளது. அதனால், ஐபிஎல் போட்டிகளில் விளையாடி விட்டு உலகக் கோப்பையில் விளையாடுவது சிறந்த வாய்ப்பாக இருக்கும். அதனால் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் எனது பெயரை பதிவு செய்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என நினைக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் திருட்டு: சிறுவன் உள்பட 6 பேர் கைது

வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!

பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?

அமெரிக்க எரிபொருள் கட்டமைப்பு முழுமையாக அழிக்கப்படும்! ஈரான் சூளுரை
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

